ஒன்றாரியோவில் சிறிய ரக விமானமொன்று அதிவேக நெடுஞ்சாலையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஒன்றாரியோ – கியூபெக் எல்லைப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விமான விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒன்றாரியோ – கியூபேக் மாகாண எல்லைப் பகுதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.