கோவிட் தடுப்பூசிகள் விரயமாவதனை வரையறுக்கும் முயற்சியில் கனடால் தோல்வியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலப் பகுதியில் அவசரமாக பெருந்தொகை தடுப்பூசி கொள்வனவு செய்யப்பட்டதில் தவறில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய முறையில் தடுப்பூசிகள் முகாமைத்துவம் செய்யப்படாத காரணத்தினால் மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் 2022ம் ஆண்டு மே மாதம் வரையில் 169 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 84 மில்லியன் தடுப்பூசிகள் நாடு முழுவதிலும் பொதுமக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் 85 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.