Home இந்தியா 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செயல்பட்ட கோவை செல்வராஜ்

14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செயல்பட்ட கோவை செல்வராஜ்

by Jey

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த அவர், கடந்த 3-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில்,இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நானும் என்னுடைய கோவை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் பாரதி, மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசினோம்.

ஏழைகளுக்காக ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் எங்களை இணைத்துக் கொண்டோம். 1971 ஆம் ஆண்டு 14 வயதில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செயல்பட்ட நான் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

related posts