கனடாவில் இதுவரையில் 18 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்று அதிகளவில் பரவக்கூடிய இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இதுவரையில் கொவிட் நோய்த் தொற்று காரணமாக 24908 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலப் பகுதியில் 2.44 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.