கல்கரியின் மேயர் வேட்பாளரான Kevin J. Johnston ஐ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்று திரட்டியதாகவும், சுகாதார அதிகாரிகளை மிரட்டியதாகவும் ஜொன்ஸ்டன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் நீதிமன்றின் உத்தரவினை மீறி செயற்பட்டமைக்காக ஜொன்ஸ்டன் கைது செய்யப்பட்டார்.
தாம் நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்டால் சுகாதார அதிகாரிகளை கைது செய்வதாக காணொளி ஒன்றையும் ஜோன்ஸ்டன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதார விதிகளை அமுல்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஜொன்ஸ்டன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.