முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கனரக வாகன தொழிற்சாலை அணி 1-0 என்ற கோல் கணக்கில் சேப்பாக் யங்ஸ்டர்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. ரஞ்சித் வெற்றிக்கான கோலை அடித்தார்.
மற்றொரு கால்இறுதியில் அடையார் யுனைடெட் கிளப் 3-0 என்ற கோல் கணக்கில் ரிசர்வ் வங்கியை சாய்த்தது. இன்னொரு கால்இறுதியில் தமிழ்நாடு தபால் துறை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வேளச்சேரி கிளப்பை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
இதே போல் மெட்ரான் ரெஜிமன்ட் மையம் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்.வி.அகாடமியை வென்றது. இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை-அடையார் யுனைடெட் கிளப் (பிற்பகல் 1.30 மணி), தமிழ்நாடு தபால் துறை-மெட்ராஸ் ரெஜிமன்ட் மையம் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன