Home கனடா கனடாவில் மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு

கனடாவில் மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு

by Jey

கனடாவில் மீண்டும் வட்டி வீத அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மத்திய வங்கியினால் இந்த வட்டி வீத அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய மத்திய வங்கி 4.25 வீதத்தினால் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் கனடாவில் அதிகூடிய வட்டி வீதம் தற்பொழுது பதிவாகியுள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி அண்மைய மாதங்களில் வட்டி வீதத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் வட்டி வீதம் அதிகரித்துள்ளது.

வட்டி வீதம் உயர்த்தப்பட்டாலும் மறுபுறத்தில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts