கனடாவின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என இராணுவ விவகாரங்கள் தொடர்பான நிபுணர் பேராசிரியர் Christian Leuprecht தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் டெனி போர்டனின் திடீர் ராஜினாமா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.
மிகவும் வலுவான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனால் தலைமை அதிகாரியின் பதவி விலகல் ஒட்டுமொத்த செயற்பாடுகளை பாதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ விசாரணைகளின் காரணமாக டெனி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், கொவிட் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் சீரான முறையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.