ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்து 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் டிராவிஸ் ஹெட், லபுசேன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 2-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.