கனடா முழுவதிலும் எரிபொருள் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த எரிபொருள் விலை வீழ்ச்சியானது எதிர்வரும் விடுமுறை காலம் வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சராசரியாக 143 சதங்களாக கனடாவில் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த மாதம் முதல் இதுவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 30 சதங்களினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 136.5 சதங்களாக காணப்பட்டது.
இந்த விலை வீழ்ச்சியை இதுவரையில் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பருவ காலம் பூகோள அரசியல் முரண்பாடுகள் விநியோகம் காலநிலை மாற்றம் மற்றும் கேள்வி ஆகிய காரணிகளின் அடிப்படையில் எரிபொருளின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் சில வாரங்களுக்கு பெட்ரோலின் விலை குறைந்த அளவிலே காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் அதன் பின்னர் விலையும் அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.