Home கனடா பிரதமரின் துப்பாக்கி குறித்த சட்டத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு

பிரதமரின் துப்பாக்கி குறித்த சட்டத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு

by Jey

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் துப்பாக்கி தொடர்பான புதிய உத்தேச சட்டத்திற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறை கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் லிபரல் அரசாங்கம் துப்பாக்கிகளை பயன்படுத்துவது கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

எனினும் இந்த சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பழங்குடியின சமூகத்தினர் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் தங்களது உரிமைகள் மீறப்படுவதாக பழங்குடி இன மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துப்பாக்கியை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வேட்டையாடுவதற்கு முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகளை ஆயுதங்களாக பார்க்க முடியாது எனவும் அதவை தங்களது வேட்டையாடும் கருவிகள் எனவும் பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

related posts