Home உலகம் பங்களாதேஷ் பிரதமரை பதவி விலக கோரி போராட்டம்

பங்களாதேஷ் பிரதமரை பதவி விலக கோரி போராட்டம்

by Jey

பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை இவ்வாறு வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தத் தொடங்கியிருந்தனர்.

அவர்களின் கூற்றுப்படி, இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஆனால், அதில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்று அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் எரிபொருள் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைமை இருந்தும் கடந்த செவ்வாய்கிழமை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் எதிர்கட்சியின் தலைமையகத்திற்குள் புகுந்து சோதனையிட நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சனிக்கிழமை போராட்டம் தொடங்கியதாக தெரிகிறது.

பிரதமர் ஹசீனா பதவி விலக வேண்டும், நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை. அதன் பிறகு, காபந்து அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என தேசியவாத கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஹிருதீன் ஸ்வபன் தெரிவித்தார். எனினும், பிரதமர் ஹசீனா பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

related posts