ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
87 வயதான பெண் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஸ்டோன் ஜர்ஜ் மற்றும் கார்ல் லிங்க் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்திற்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்மைய நாட்களாக கனடாவின் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.