கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள். பிரான்சில் போலீசார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள்.
பெல்ஜியத்தில் போலீசார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது.
இந்த வன்முறைகளை தடுத்த போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.