கனடாவில் சிறுவர் சிறுமியருக்கு சளி காய்ச்சல் நோய் அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்களுக்கு இதுவரையில் சளி காய்ச்சல் வைரஸ் தடுப்பு ஊசி ஏற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சளி காய்ச்சல் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக கனடா முழுவதிலுமே 30 வீதத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளை 11 வீதத்திற்கும் குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்.
இதனால் கனடிய வைத்தியசாலைகளில் குறிப்பாக சிறுவர் நோய் பிரிவுகளில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர்கள் முடிந்த அளவு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் என கனடாவின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர் திரேசா டாம் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் சிறுவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஐந்து வயதிலும் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.