Home கனடா டொரன்டோ வாடகை அதிகரிப்பு

டொரன்டோ வாடகை அதிகரிப்பு

by Jey

கனடாவின் டொரண்டோ நகரில் வாடகை தொகை கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டு 12 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சராசரி வாடகை தொகை 2024 டாலர்களாக உயர்வடைந்துள்ளது. ஒட்டுமொத்த கனடாவிலும் வாடகை தொகை மிக அதிகமாக காணப்படும் இரண்டாவது நகரமாக டொரன்டோ திகழ்கின்றது.

இந்த வரிசையில் கனடாவின் வான்கூவார் நகரம் முதல் இடத்தை வகிக்கின்றது. மாதாந்த அடிப்படையில் மற்றும் வருடாந்த அடிப்படையில் வாடகை தொகை ஒப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி நகரின் வாடகை தொகை 24% வீத உயர்வு எனவும் டொரட்டோவின் வாடகை தொகை 23% வீத உயர்வுஎனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்று டொரன்டோவில் 3363 டாலர்களுக்கும் வான்கூவாரில் 3707 டாலர்களுக்கும் வாடகைக்கு விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறதுஃ

அண்மைய ஆண்டுகளாகவே டொரன்டோ நகரில் வாடகை தொகை தொடர் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts