திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள் கொவிட் 19 காரணமாக பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்று (15) காலை 10.00 மணி தொடக்கம் இன்று (16) காலை 10.00 மணி வரையான தகவல்கள் மூலமான புள்ளி விபரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் பிரகாரம் 24 மணி நேரத்திற்குள் 55 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 57 பி.சி.ஆர் மாதிரிகளும் 206 அன்டிஜன் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன.
மூதூர் சுகாதார பிரிவில் 22 தொற்றாளர்களும் திருகோணமலை சுகாதார பிரிவில் 11 தொற்றாளர்களும் கிண்ணியாவில் 06, குறிஞ்சாக்கேணியில் 06, குச்சவெளியில் 04, திருகோணமலையில் 02, உப்புவெளியில் 02, கந்தளாய்யில் 02 என மொத்தமாக புதிய 55 தொற்றாளர்கள் 24 மணி நேரத்தினுள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் (மே மாதம்) மட்டும் தற்போது வரை 709 கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுதும் 2150 தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.
24 மணி நேரத்தில் மரணப் பதிவாக திருகோணமலை சுகாதார பிரிவில் 01,உப்புவெளி 01, கிண்ணியா 01, மூதூர் 01, கந்தளாய் 01 என ஐந்து தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.