இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியதாக கனடாவின் ஒன்றாரியோ மாகாண நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணியதாக நான்கு பேர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
இவ்வாறு குற்றம் சம்பந்தப்பட்ட நான்கு பேரில் ஒன்றாரியோ மாகாண பிரஜை ஒருவரும் உள்ளடங்கின்றார்.
இந்த நபர்கள் தீவிரவாத இயக்கத்தின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் எனவும டிஜிட்டல் முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர நீதிமன்றில் இந்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
35 வயதான முகமது டேவிட் அஸ்மி, 25 வயதான சீமா ரஹ்மான் 34 வயதான கலீலுல் யூசுப் மற்றும் அப்துல்லா அல் தாக்கி ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இதில் கலீலுல் யூசுப் என்பவர் ஒன்றாரியோவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிகாரிகள் எல்லாம் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.