Home உலகம் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம்

அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம்

by Jey

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின, ஆனால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:35 மணிக்கு மிட்லாண்டிலிருந்து வடமேற்கே 22 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மிதமான நிலநடுக்கம், வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையிலான ஒரு பெரிய பகுதியில் உணரப்பட்டது.

related posts