பீல் பிராந்திய முன்னாள் மத குருவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த மதகுரு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1980 முதல் 1983ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் தனது தேவாலயத்திற்கு வருகை தந்த சிறுவன் ஒருவனை இந்த மதகுரு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
84 வயதான ஜொசெப் வாசீக் என்ற நபரின் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் மேலும் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது என்பதுடன் இது குறித்து விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.