கியூபெக்கில் இரண்டு பழங்குடியினத்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக்கின் லிஸ்டுகுவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரணங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக லிஸ்டுகு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த குறித்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.