நேற்றைய தினம் நடைபெற்ற முடிந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை றொரன்டோவில் வாழ்ந்து வரும் ஆர்ஜென்டினா ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வீதிகளில் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று, பெனல்டி முறையில் அர்ஜென்டினா வெற்றியை பதிவு செய்து கொண்டது.
வெற்றியை தொடர்ந்து டொரன்டோவின் இரவு நேர கேளிக்கை விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், மதுபான சாலைகள் போன்றவற்றில் ரசிகர்கள் குழுமி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.