வோகனில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
73 வயதான பிரான்சிஸ்கோ வில்லி என்ற நபரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஜேன் மற்றும் ரதபோர்ட் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியிருந்த்து.
சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
சந்தேக நபர் குடியிருப்பு தொகுதியின் முதலாம் மாடியில் குடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு செமி அடோமெடிக் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் தொடர்மாடிக் குடியிருப்பு சபையின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்மாடிக் குடியிருப்பு சபை உறுப்பினர்களுக்கும், சந்தேக நபருக்கும் இடையில் நீண்ட கால முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.