Home விளையாட்டு சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்த கபில் தேவ்

சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்த கபில் தேவ்

by Jey

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள்.

அதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவ், சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது. இந்த வார்த்தை பொதுவானது சரியா?. அவர்களிடம் நான் விளையாடாதீர்கள் என்று சொல்வேன்.

யார் உங்களை விளையாட சொன்னார்கள்? அழுத்தம் உள்ளது. ஆனால் அந்த மாதிரியான அழுத்தம் தரக்கூடிய இடத்தில் நீங்கள் ஆடுகிறீர்கள்.

 

related posts