வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.