Home சினிமா ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்த பாடல்

ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்த பாடல்

by Jey

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.சென்னை ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது.இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

இந்த பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்தார். இது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது. “நாம் நாட்டு நாட்டு பாடலை உக்ரைனில் படமாக்கினோம்.

அது உண்மையான இடம். உண்மையில் அது உக்ரைன் ஜஅதிபரின் அரண்மனை. அரண்மனைக்கு பக்கத்திலேயே பாராளுமன்றம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக உக்ரைன் அதிபர் தொலைக்காட்சி நடிகராக இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளார். .

வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர் அதிபர் ஆவதற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடரில் அதிபராக நடித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர் கூறினார். நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப்பில் கிட்டத்தட்ட 80 மாறுபாடுகள் இருந்தன.

நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பாடலுக்கு 18 டேக்குகளை எடுத்து கொண்டனர். எஸ்.எஸ்.ராஜமவுலி கடைசியில் இரண்டாவது டேக்கை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தார்

related posts