கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இம்முறை நத்தார் பண்டிகையை ஜமெய்க்காவில் கொண்டாட உள்ளார்.
இந்த விடுமுறையை காலத்தை கழிப்பதற்காக பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமெய்க்கா நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
இந்த விஜயம் ஒர் தனிப்பட்ட விஜயம் என பிரதமர் அலுவலகம அறிவித்துள்ளது.
விடுமுறையில் இருந்தாலும், ஒட்டாவாவுடன் அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தி பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விடுமுறையை கழிப்பது தொடர்பில் ஏதேனும் விதி மீறல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து முன்கூட்டியே ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பிரதமரின் தனிப்பட்ட விஜயத்தின் போது நியதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது