Home இந்தியா கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

by Jey

கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையத்தை அடுத்த கட்டாஞ்சி மலைப்பகுதியில் தண்டிகை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வபோது ஊருக்குள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த பெருமாள் கோவிலில் இன்று சனிக்கிழமை பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும் என்பதால், அவர்களுக்கான அன்னதான பிரசாதங்கள் தயாரிப்பதற்காக அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இரவு நேரத்தில் சில காட்டு யானைகள் கோவிலுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு காலி செய்துள்ளன.

இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் அங்கு வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் கோவிலுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டுச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

related posts