கனடா முழுவதிலும் சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த புயல் காற்று வீசும் என மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக், ஒன்றாரியோ, பிரிட்டிஷ் உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் பல வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி அவதியுறுகின்றனர்.
சுமார் மூன்றரை லட்சம் வாடிக்கையாளர்களது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளிலும் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.