Home இந்தியா மழையால் பாதிக்கப்பட்ட 200 எக்டர் நெற்பயிர்களுக்கு நிவாரணம்

மழையால் பாதிக்கப்பட்ட 200 எக்டர் நெற்பயிர்களுக்கு நிவாரணம்

by Jey

மழையால் பாதிக்கப்பட்ட 200 எக்டர் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கலசபாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் சுமார் 300 எக்டர் நிலத்தில் விவசாயிகள் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது அறுவடை தொடங்க வேண்டிய நிலையில் கடந்த சில வாரங்களாக பய்து வரும் மழையின் காரணமாக விளைச்சல் அடைந்த நெற்பயிர்கள் வயலில் தேங்கிய தண்ணீரில் சாய்ந்து நெல்மணிகள் சேற்றில் மிதக்கின்றன. இதனால் விவசாயிகள் நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.

ஓரளவு நல்ல நிலையில் எள்ள கதிர்களையாவது அறுவடை செய்து கிடைப்பதையாவத எடுக்கலாம் என்றால் அறுவடை எந்திரங்களும் கிடைக்காமல் சேற்றில் விழுந்த நெல்மணிகள் முளைத்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

கலசபாக்கம், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஹெக்டர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

related posts