மொன்றியலில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நொட்ராடேம் விதி மற்றும் 25ம் அவன்யூ என்பனவற்றுக்கு அருகாமையில் காணப்படும் குடியிருப்பு ஒன்றில் இந்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த ஆண் மற்றும் பெண்ணின் வயது 45 என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஆண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமையை அவதானிக்க முடிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.