கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மருந்து வகைகளை விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருந்தாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏற்படக்கூடிய சில நோய்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நேரடியாக மருந்தாளர்களே மருந்து வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், வாய்புண், மாதவிடாய் தசை பிடிப்பு, அமிலத்தன்மை, சளிப்பிரச்சினை, பூச்சிக்கடி உள்ளிட்ட 13 வகையான நோய்களுக்கு மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்கள் நேரடியாக மருந்து வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.