Home இந்தியா மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

by admin
தமிழகம் உள்பட கரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநில பிரதிநிதிகளுடனான பிரதமரின் ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், முதல்வர் ஸ்டாலினுடன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாள ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணைய ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தமிழ்கத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களும் பிரதமர் உடனான ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மருத்துவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று (மே 18) மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பல மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

related posts