பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டில், மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதல் 3 நாட்கள் பந்து வீச்சின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். குறிப்பாக நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 612 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
அதே சமயம் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் வெறும் 137 ரன்னில் முன்னிலையில் இருந்த போது அதிரடியாக ‘டிக்ளேர்’ செய்து 138 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அப்போது ஏறக்குறைய 15 ஓவர்கள் எஞ்சியிருந்தது