இந்த ஆண்டில் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உணவு விலை அதிகரிப்பு குறித்து கனடாவின் டெல்ஹொயிஸ் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த 2023ம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் 7 வீதத்தினால் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று உணவுவிற்காக மேலதிகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொலர்களை செலவிட நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் உணவுப் பொருள் விலை ஏற்றத்திற்கு பிரதான ஏதுவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.