Home கனடா ஒன்றாரியோவில் அதிகளவு தீ விபத்துச் சம்பவங்கள்

ஒன்றாரியோவில் அதிகளவு தீ விபத்துச் சம்பவங்கள்

by Jey

ஒன்றாரியோவில் கடந்த ஆண்டு அதிக அளவில் தீ விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களில், கடந்த 2022 ஆம் ஆண்டு அளவில் அதிக அளவு தீ விபத்து சம்பவங்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 133 பேர் தீ விபத்து காரணமாக ஒன்றாரியோ மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியாவில் 20 ஆண்டுகளில் பதிவான அதிகூடிய தீ விபத்து மரணங்கள் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீ விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்கப்பட கூடியவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகை கண்காணிப்பு கருவிகளை பொருத்திக் கொள்வது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிகளை முன்கூட்டியே ஒழுங்குபடுத்தி கொள்ளுதல் ஆகிய காரணிகளின் ஊடாக உயிர் சேதங்களை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நவீன வீடுகளில் அதிக அளவு நச்சுப் பொருட்கள் கலந்த கட்டுமான பொருட்கள் காணப்படுவதாகவும் குறிப்பாக பிளாஸ்டிக் காணப்படுவதனால் கருப்பு புகை வேகமாக பரவுவதாகவும் நச்சுப் புகையை சுவாசிப்பதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியில் அதிகளவு தீ விபத்து சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts