அமெரிக்காவில் இளம் விமானி ஒருவர் விமானத்தின் போது பதற்றமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதான பைலட் ப்ரோக் பீட்டர்ஸ் ஏடிசிக்கு அனுப்பிய ஒரு செய்தியில், ‘என் பாட்டி பின் இருக்கையில் அமர்ந்து அழுவதை நான் கேட்டேன்’ என அனுப்பினார். இந்த செய்திக்குப் பிறகு, அவர் கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கினார்.
கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைடு முனிசிபல் விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை உணவுக்கு தனது குடும்பத்தினரை ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தில் பைலட் பீட்டர்ஸ் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
விமானம் ஓட்டும் போது, அவர் பயங்கரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதை அடுத்து சான் பெர்னார்டினோ தேசிய வனப்பகுதியில் இருவழி நெடுஞ்சாலைக்கு அருகில் தனது விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் விமானிக்கு ஏற்பட்டது.
இளம் விமானி நான் பாட்டியை அமைதிப்படுத்த வேண்டும் என்று பீட்டர்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிடம் கூறினார். விமானத்தை பத்திரமாக கீழே இறக்கி, அதில் இருந்த அனைவரும் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இளம் விமானி பீட்டர்ஸ் நான்கு மாதங்களுக்கு முன்புதான் விமானி உரிமம் பெற்றதாக சிஎன்என் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பீட்டர்ஸ் இனி அடுத்த வாரம் விமானத்தை மீண்டும் தொடங்குவதாக கூறினார்.