இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த 30-ம் தேதி விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு அதிகாலை சொகுசு காரில் சென்றார்.
காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார். அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து வருகிறது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்