இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இளம் வீரர்களான ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார்.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இறுதி ஓவரில் அக்சர் படேலைப் பய்னபடுத்தினார். மேலும் ஹர்ஷல் படேலை முதல் ஆட்டத்திற்குப் பிறகு ,ஹர்சல் படேலுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 2வது போட்டியில் தேர்வு செய்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விகுறித்த உரையாடலில் பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, இந்திய அணிக்கு பொறுப்பேற்கும் அனைவரும் இந்திய அணி விளையாடும் விதத்தை மாற்ற விரும்பவுது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளா