மெக்ஸிக்கோவில் உள்ள கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவில் கனேடிய சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கியுள்ளனர்.
அந்நாட்டில் சில பகுதிகளில் கலவரம் வெடித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்றுக் கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக தேவையற்ற பயணங்களை முற்று முழுதாக தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் இந்த கலவரங்கள் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
மெக்ஸிக்கோவின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்ததனை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளது