Home இலங்கை மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்ட சுனாமி நினைவாலயம்

மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்ட சுனாமி நினைவாலயம்

by Jey

சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக நினைவாலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் குறித்தி சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்டு நேற்று (06.01.2023) மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது ஆறு உறவுகளை இழந்த குடும்பத்தினர் பொதுச் சுடரை ஏற்றி வைத்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய தலைமை பரிசோதகர், அரசியல் பிரமுகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டதுடன் பொது மக்களும் கலந்து கொண்டு மலர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

related posts