Home விளையாட்டு பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட்

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட்

by Jey

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் கராச்சியில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 449 ரன்களும், பாகிஸ்தான் 408 ரன்களும் குவித்தன 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 277 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து 319 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவும், சாத் ஷகிலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி 8 ஓவர்களுக்கு பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ரன் தேவைப்பட்டது. சிறிது நேரத்தில் சர்ப்ராஸ் அகமது 118 ரன்களில் (176 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

related posts