ஜப்பானிய பிரதமர் புமியோ கிஸிடா முதல் தடவையாக அதிகாரபூர்வமாக கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரம் ஜப்பான் பிரதமர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இயற்கை திரவ எரிவாயு தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஜீ7 நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஜப்பான் சுழற்சி முறையில் இம்முறை ஏற்றுக் கொள்கின்றது.
உலகின் முதனிலை பொருளாதாரங்களைக் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
எதிர்வரும் புதன்கிழமை ஜப்பான் பிரதமர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.