Home இந்தியா சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் 3 பேர் பலி

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் 3 பேர் பலி

by Jey

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ந்தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார்.

சந்திரபாபு நாயுடு கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய பின் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பி.சேஷசயனா ரெட்டி தலைமையில் ஆந்திர அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்தக் குழு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

related posts