சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு செல்ல தனது வாய்ப்பை அதிகப்படித்தி உள்ளது.
சொல்லப்போனால் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா 90% உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கவுள்ளது.
சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா 2012-க்குப்பின் கடந்த 10 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை.
இந்நிலையில் கடந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் விளையாடிய அனுபவம் தற்போதுள்ள பார்ம் ஆகியவற்றை பயன்படுத்தி இம்முறை நிச்சயமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.