கடந்த ஆண்டு கத்தாரில் , நடந்த உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் பெனால்டியில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ( கோல்கீப்பர் ) ஹியூகோ லோரிஸ் தனது 36 வயதில் சர்வதேச கால்பந்தில் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .
இது குறித்து அவர் கூறுகையில் , எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன் என்ற உணர்வுடன், எனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளேன் “உலகக் கோப்பையின் முடிவில் இருந்து நான் உண்மையில் அதைப்பற்றி யோசித்து வருகிறேன், ஆனால் ஆறு மாதங்களாக எனக்குள் ஏதோ ஆழமாக இருந்தது, அது இந்த முடிவை எடுக்க என்னை வழிநடத்தியது என கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலகக்கோப்பையை லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.