Home இந்தியா சென்னை ஐகோர்ட் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

சென்னை ஐகோர்ட் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

by Jey

அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பணிநியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து 25 ஊழியர்களை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஐகோர்டில இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊழியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிநீக்க தொடர்பாக எந்த நோட்டீசும் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து ஆவினில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால் தடைவிதித்தனர். மேலும், ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

related posts