பொருளாதார நெருக்கடி நிலைமைகள் கனடாவில் வீட்டு வன்முறைகளை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பிலான நிபுணர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால், கண்ணுக்கு தெரியாது வீட்டு வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் வீட்டு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமகளினால் பெண்களினால் வாழ்க்கைச் செலவினை ஈடு செய்ய முடியாத சூழ்நிலைகளில் வீட்டு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.