விமான வாடிக்கையாளர் சேவை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி ஏவிஷேன் அக்டாமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடையை நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர 18 முதல் 25 வயது நிரம்பிய பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரூ.20 ஆயிரம் பயிற்சிக்கான கால அளவான 3 மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AASSC (AEROSPACE SKILL SECTOR COUNCIL) யால் அங்கீரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணி புரிய நூறு சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்