மொத்தம் ரூ.7½ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, திரீஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த், மாள்விகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
காயத்தால் 5 மாத ஓய்வுக்கு பிறகு கடந்த வாரம் மலேசிய ஓபனில் ஆடிய சிந்து முதல் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தார். இந்த சீசனை சொந்த மண்ணில் வெற்றியோடு தொடங்கும் ஆவலில் உள்ள அவருக்கு அது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவார்.
‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், சமீபத்தில் மலேசிய ஓபனை வென்றவருமான அகானே யமாகுச்சி (ஜப்பான்), அன்சே யங் (தென்கொரியா), சென் யுபே(சீனா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) உள்ளிட்டோர் சிந்துவுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் சாம்பியனான சிந்து முதல் ரவுண்டில் சுபனிதா கேட்தோங்கை (தாய்லாந்து) இன்று எதிர்கொள்கிறார்.
இதே போல் சாய்னா நேவால், முதல் சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டுடன் களம் காணுகிறார். ஸ்ரீகாந்த்-ஆக்சல்சென் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியமான விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) மோதுகிறார். தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆக்சல்சென்னுக்கு எதிராக இதுவரை 12 முறை மோதியிருக்கும் ஸ்ரீகாந்த் அதில் 3-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென்- பிரனாய் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். கோடாய் நராகா (ஜப்பான்), முன்னாள் உலக சாம்பியன் லோ கியான் (சிங்கப்பூர்), மலேசியாவின் லீ ஸி ஜியா, ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ, தாய்லாந்தின் குன்லாவுட் விடிட்சர்ன் ஆகியோரும் களம் இறங்குகிறார்க